அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் “மனிதத்தை நேசிக்கும் அனைவரும் தன்னோடு இருக்கிறார்கள் என்பதை சூர்யா நினைவில் கொண்டு, அச்சுறுத்தல்களை புறந்தள்ளி சமூக அக்கறையுள்ள படங்களைத் தர வேண்டும். அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் என்றும் துணை நிற்கும்” எனக் கூறியுள்ளார்.