தமிழக சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற போது திமுகவின் சார்பில் பிரச்சார பாடல் ஒன்று உருவாக்கப்பட்டது. ஸ்டாலின் தான் வாராரு..விடியல் தரப் போறாரு என்று தொடங்கும் அந்தப் பாடல் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் வெற்றிக்கு இந்த பாடலும் ஒரு காரணம் என்று கூறினால் அது மிகையாகாது
இந்த நிலையில் இந்த பிரச்சார பாடலுக்கு இசையமைத்த ஜெரார்டு ஃபெலிக்ஸ் என்பவருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். அதேபோல் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஸ்டாலின் தான் வாராரு..விடியல் தரப் போறாரு என்ற கழகத்தின் தேர்தல் பிரச்சார பாடலுக்கு இசையமைத்த தம்பி @jerard_felix - பிரேஷிசாந்தனா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் பங்கேற்று மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினோம். மணமக்கள் தமிழ் போல் வாழ்க.