அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உலக முதலீட்டாளர்களை சந்திக்க என தகவல்..!

Siva

வெள்ளி, 28 ஜூன் 2024 (15:26 IST)
உலக முதலீட்டாளர்களை சந்திக்க விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார்  என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முத உலக முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் சென்றார் என்பதும் அங்கு நடந்த முதலீட்டாளர் சந்திப்பில் பல்வேறு முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வர புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது’

இதனையடுத்து சென்னையில் உலக மகா முதலீட்டாளர் மாநாடு நடந்த போதும் அதிலும் ஏராளமான முதலீட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது,.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்வீடன் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு தமிழக முதல்வர் சென்றார் என்பதும் பல்வேறு தொழில் நிறுவனங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளையும் ஈர்த்தார் என்று கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அங்கும் அவர் முதலீட்டாளர்களை ஈர்ப்பார் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்