திருவண்ணாமலையையும் திமுகவையும் பிரிக்க முடியாது; முதல்வர் ஸ்டாலின்..!

ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (18:05 IST)
திருவண்ணாமலையையும் திமுகவையும் பிரிக்க முடியாது என திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
 
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தின் பயணம் தொடங்கியது திருவண்ணாமலையில் தான், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது திருவண்ணாமலை தான்.
 
நாடாளுமன்ற தேர்தல் களம் நமக்காக காத்திருக்கிறது, வெற்றிக் கனியை பறிப்போம், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தான் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பொறுப்பு, தொண்டர்கள் தான் 'SECRET OF MY ENERGY'
 
தொண்டர்களை நம்பித்தான் 'நாற்பதும் நமதே, நாடும் நமதே' என முழங்கிக் கொண்டிருக்கிறேன்" என்று பேசினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்