லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற ஸ்டாலின்: கருணாநிதி நூல் பரிசு..!

வெள்ளி, 23 ஜூன் 2023 (10:18 IST)
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற ஸ்டாலின் அவருக்கு கருணாநிதி குறித்த நூல் ஒன்றையும் பரிசாக அளித்தார். 
 
எதிர் கட்சிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு தனி விமானத்தில் பீகார் சென்றார். இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன. 
 
இந்த நிலையில் பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ்வுடன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சந்தித்தார். மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் அவர் ஆசி பெற்றதாகவும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன,.
 
மேலும் இரு தலைவர்கள் சந்திப்பின் அடையாளமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய நூல் ஒன்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்