காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிரை காப்பாற்ற தண்ணீர் தேவை என்றும், குறுவை நெற்பயிரையும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் காப்பாற்ற வேண்டும் என்றும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்பட்ட காவிரி நீர் பற்றாக்குறையை தீர்க்க கர்நாடகா அரசுக்கு பிரதமர் அறிவுரை வழங்க வேண்டும் என்றும், 80% நிரம்பிய சூழலிலும் கர்நாடகாவின் முக்கிய அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.