இன்றுடன் நிறைவடையும் ஊரடங்கு: முதல்வரின் புதிய அறிவிப்புகள் என்ன?

திங்கள், 10 ஜனவரி 2022 (07:20 IST)
தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது என்பதும் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் தமிழக அரசு பிறப்பித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதியான இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் ஊரடங்கு நீடிப்பது மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை செய்ய உள்ளார் 
 
இன்றைய ஆலோசனையில் என்னென்ன கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்? முழு ஊரடங்கு நீடிக்குமா? என்பது குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது 
சென்னை உள்பட ஒரு சில நகரங்களில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஒரு சில நகரங்களில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
இன்றைய ஆலோசனை முடிந்த பின்னர் முதல்வரிடம் இருந்து விரிவான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்