Pondy-ல் Party: நியூ இயர் கொண்டாட்டங்களுக்கு அனுமதி!!

செவ்வாய், 22 டிசம்பர் 2020 (15:21 IST)
புதுச்சேரி கடற்கரையில்  புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.
 
வரும் 31 மற்றும் 1 ஆம் தேதி தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆம், இந்த வருடம் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவிலும் அடுத்த நாள் புத்தாண்டு நாளான 1 ஆம் தேதியும், கடற்கரை, சாலைகளில், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும், கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு 2021 புத்தாண்டுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் உற்சாகம் இல்லாமல் தமிழகம் காணப்படும் என நினைத்த நிலையில் புதுச்சேரி கடற்கரையில்  புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி. இதனோடு விடுதிகளில் 200 பேர் வரை புத்தாண்டு கொண்டாடலா எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்