கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வ்ருகின்றன. அந்த வரிசையில் இப்போது உயர் நீதிமன்றங்களுக்கான விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றங்களுக்கு டிசம்பர் 22 ஆம் தேதி முதல் (நாளை) முதல் ஜனவரி 1 முதல் மொத்தம் 11 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வழக்குகள் ஒத்திப்போகும் சூழல் உருவாகியுள்ள்து.
இடைப்பட்ட இந்த விடுமுறை நாளில் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி மட்டும் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் அவசரகால வழக்குகள் விசாரிக்கப்படும். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எம்.நிர்மல் குமார், சி.சரவணன், பி.புக ழேந்தி ஆகிய நீதிபதிகளும் ,சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா, பி.ராஜமாணிக்கம், கிருஷ்ணன் ராமசாமி ஆகிய நீதிபதிகளும், விடுமுறை கால நீதிபதிகளாக செயல்படுவார்கள் என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் நேற்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.