முதல்வர் பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் விபத்து!!!
திங்கள், 4 ஜனவரி 2021 (17:25 IST)
தமிழக முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து செல்லும்போது, அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த பாதுகாப்பு வாகனங்கள் விபத்துக்குள்ளானது.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
எனவே அத்தனை கட்சிகளும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
ஆளும் கட்சி அதிமுக மற்றும் எதிர்க்கட்சி திமுக அதன் கூட்டணிக்கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து குற்றம்சுமத்தி விமர்சனங்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி சேரன்மகாதேவி புறப்பட்டுச் செல்லும்போது, அவருக்குப் பின்னால் பாதுகாப்புக்காக வந்த இரு வாகனங்கள் திடீரென விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.