இதுகுறித்து பேசியுள்ள பாஜகவைச் சேர்ந்த ஹெச் ராஜா கல்விக் கடனை ரத்துச் செய்வாராம் ஸ்டாலின். எது மத்திய அரசின் அதிகாரம் எது மாநில அரசின் அதிகாரத்தில் வருகிறது என்பதே தெரியாத இவர் எம்மாதிரி நிர்வாகத்தை தருவார் என்று கற்பணை செய்து பார்க்கவே முடியவில்லை. தபால் கட்டணம் குறித்தும் அறிவிப்பு வந்தாலும் வரலாம்.ஆண்டவா தமிழகத்தை காப்பாற்று எனக் கூறியிருந்தார்.
மேலும், ஹெச் ராஜா தனது பேட்டியில் கூறியுள்ளதாவது :
திமுக என்றாலே பிரியாணிக் கடையில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காததுதான் நினைவுக்கு வருகிறது; திராவிடக் கட்சிகளால் இளைஞர்களின் மூளையில் அழுக்குப் படிந்துள்ளதாகவும், தமிழக அரசியல் திரையுலகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முட்டாள்கள் அதிகமாகிவிட்டனர் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.