இரவுக்கு பதிலாக காலையில் பேருந்துகள்.. ஞாயிற்றுக்கிழமைகளில்..? – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

திங்கள், 19 ஏப்ரல் 2021 (12:52 IST)
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து இயக்குதல் குறித்த விரிவான அறிவிப்பை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகம்  முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இரவு முழு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவித்துள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி அரசின் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வெளியூர் செல்லும் இரவு நேர பேருந்துகள் இனி காலை 4 மணி தொடங்கி இரவு 8 மணி வரை செயல்படும். ஞாயிற்றுக்கிழமை முழுமுடக்கம் என்பதால் அன்று எந்த பேருந்தும் செயல்படாது.

விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளோர் தங்கள் பயண நேரத்தை மாற்றி கொள்ளவும் அல்லது பணத்தை திரும்ப பெறவும் அருகிலுள்ள பேருந்து நிலைய கட்டுப்பாட்டு அலுவலகத்தை நாடலாம். ஆன்லைனில் டிக்கெட் விண்ணப்பித்தோர் ஆன்லைனில் பயண நேரத்தை மாற்றி கொள்ள, பணத்தை திரும்ப பெற வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்