சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விபத்து: தெற்கு ரயில்வே விளக்கம்

திங்கள், 25 ஏப்ரல் 2022 (08:00 IST)
நேற்று மாலை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து இதுகுறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது
 
அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளான புறநகர் ரயிலில் இருந்து ஓட்டுநர் கீழே குதித்து உயிர் தப்பினார்
 
கடற்கரை ரயில் நிலையத்தில் ஒன்றாவது நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளான ரயிலில் பயணிகள் யாரும் இல்லை 
 
விபத்துக்குள்ளான ரயில் மோதியதில் ஒன்றாவது மேடை சேதமடைந்தது என்றாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
 
புறநகர் மின்சார ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகளின் உயர் நிலைக்குழு ஆய்வு செய்து விசாரணை செய்து வருகிறது 
 
விபத்துக்குள்ளான ரயிலின் சேதமுற்ற இரண்டு பெட்டிகள் தவிர இதர பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக உள்ளனர். இவ்வாறு அந்த விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்