இன்னும் 48 மணி நேரத்தில் வானிலை எப்படி மாறும்..?

திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (12:02 IST)
வானிலை குறித்த முக்கியத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

 
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்து வருவதால் தமிழகத்தில் இன்னும் மழை நீடித்து வருகிறது. இந்நிலையில் வானிலை குறித்த முக்கியத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
 
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 
 
சென்னையில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரியாவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்