கடந்த வாரங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கேரளா மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் இரண்டு நாட்களுக்கு மலைத்தொடர் மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும், கேரளா, கர்நாடகா பகுதிகளிலும் மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்க்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.