சென்னை மெட்ரோ அருகே திடீரென தீப்பிடித்த கார்! – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

திங்கள், 25 ஜூலை 2022 (15:39 IST)
சென்னையில் பிரதான சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே பிரதான போக்குவரத்து சாலை ஒன்று உள்ளது. இன்று திங்கட்கிழமை என்பதால் வழக்கத்தை விட சாலை அதிகமான வாகன நெரிசலில் இருந்துள்ளது. அப்போது அந்த சாலையில் பயணித்த கார் ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது.

கார் திடீரென தீப்பற்றியதை கண்ட பிற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில நிமிடங்களில் கார் முன்பக்கம் முழுவதும் தீப்பற்றியுள்ளது. இதை அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் தங்கள் போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்