சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

சனி, 23 ஜூலை 2022 (08:40 IST)
சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயரவில்லை.


ஆம், சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து 30 சதவீதம் சலுகை விலையில் கச்சா எண்ணையை அதிக அளவு இறக்குமதி செய்து உள்ளதால் இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்