சென்னை புறநகர் மின்சார ரயில்கள் நாளை இயங்கும்! – நேரம் மற்றும் முழு விவரங்கள்!

செவ்வாய், 5 டிசம்பர் 2023 (20:21 IST)
சென்னையில் புயல் மழை காரணமாக நிறுத்தப்பட்ட மின்சார ரயில் சேவைகள் நாளை முதல் வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னையின் பல பகுதிகளிலும் மழை பெய்து வந்த நிலையில் பல ரயில் நிலையங்களில் நீர் புகுந்தது. இதனால் மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது சென்னையில் இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் நாளை முதல் மின்சார ரயில் சேவைகள் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி சென்னை எழும்பூர் – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில், சென்னை கடற்கரை – திருவள்ளூர் – அரக்கோணம் (பெரம்பூர் வழி) மார்க்கத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில், திருவொற்றியூர் – கும்மிடிபூண்டி மார்க்கத்தில் 1 மணி நேரத்திற்கு ஒரு ரயில் என கால இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்