கரை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் : எந்தெந்த பகுதிகளில் கனமழை எச்சரிக்கை?

Siva

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (09:13 IST)
வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று அதிகாலை மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து, கோபால்பூர் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக, ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
 
கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், ஒடிசா, ஆந்திரா பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
மேலும் ஒடிசா, ஆந்திரா மாநில மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வின் காரணமாக, வட மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழைப்பொழிவு தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்