சென்னையில் போலீஸ் அதிகாரி ஒருவர் பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் போட வேண்டிய அவசியத்தையும், ஹெல்மெட் போடுவது மட்டுமன்றி சரியான அளவிலான ஹெல்மெட் போட வேண்டும் என்பது குறித்தும் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் போட வேண்டும் என்றும் அது ஏன் என்பதையும் அவர் விளக்கிக் கூறியுள்ளார். அதேபோல் 18 வயது நிரம்பாத லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள்தான் முதல் குற்றவாளி என்றும் அவர் கூறியது அனைவரும் சிந்திக்கத்தக்க ஒன்றாக இருந்தது.