கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் அமைத்தல், ஊர்வலம் செல்லுதல் மற்றும் வழிபடுதல் ஆகியவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் விநாயகர் சிலைகளை அமைத்தே தீருவோம் என இந்து முன்னணி போன்ற அமைப்புகள் விடாபிடியாக உள்ளன. மேலும் பாஜகவும் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்க தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் சென்னை திருவெல்லிக்கேணியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அருகே விநாயகர் சிலை அமைப்பதற்காக இந்து முன்னணி அமைப்பினர் பந்தக்கால் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து அங்கு விரைந்த போலீஸார் பந்தகால் நடும் பணியை தடுத்து அவர்களை அனுப்பிவிட்டு பந்தகாலையும் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு எழுந்தது.