காவலர்களுக்கே விபூதி அடித்த மோசடி பெண்! – சென்னையில் பரபரப்பு!

ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (12:50 IST)
சென்னையில் பணிபுரிந்த காவலர் உட்பட பல காவலர்களை குறிவைத்து பெண் ஒருவர் மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்த பாரதிராஜா என்பவர் சென்னை கடலோர காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சென்னை ஆவடியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் பேஸ்புக் மூலமாக பழக்கமாகியுள்ளார்.

சில நாட்களில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா தான் மருத்துவம் படிப்பதாகவும், கல்வி கட்டணம் கட்ட பணம் தேவைப்படுவதாகவும் கூறி ரூ.14 லட்சம் வரை பாரதிராஜாவிடம் பணம் பெற்றுள்ளார். பின்னர் சில நாட்களில் பாரதிராஜாவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாரதிராஜா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்த விசாரணையில் ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்த ஐஸ்வர்யாவை போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில் மகேந்திரன் என்ற காவலரையும் பேஸ்புக் மூலமாக ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஐஸ்வர்யாவை சிறையில் அடைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்