விளையாட்டு வீரர்களின் காயத்தை கண்டுபிடிக்க ஏஐ கருவி: சென்னை ஐஐடி சாதனை..!

Mahendran

புதன், 18 செப்டம்பர் 2024 (13:07 IST)
சென்னை ஐஐடி விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை கண்டறிய உதவும் ஏ.ஐ ஸ்கேனர் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
 
விளையாட்டு வீரர்களின் காயங்களை துல்லியமாக அறியஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திய அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர் கருவியை சென்னை ஐஐடி விஞ்ஞ்னானிகள் உருவாக்கியுள்ளனர். பேராசிரியர் அருண் கே. திட்டை தலைமையில், ஐஐடி விளையாட்டு அறிவியல் மற்றும் ஆய்வு சிறப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் குழு இந்த ஸ்கேனர் கருவியை கண்டுபிடித்துள்ளது.
 
எளிதில் வெளியே எடுத்துச் செல்லக்கூடிய இந்த கருவி மூலம் விளையாட்டு வீரர்களின் காயங்களை மட்டுமின்றி, காயத்தின் தாக்கம் எவ்வளவு பரவியுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 
 
மேலும், காயமடைந்த வீரரை தொடர்ந்து விளையாட அனுமதிக்கலாமா அல்லது உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற அனுப்ப வேண்டுமா என்பதையும் உடனடியாக தீர்மானிக்க முடியும். 
 
முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்கேனர் கருவி, விளையாட்டு வீரர்களின் பாதுகாப்புக்கு முக்கிய சாதனமாக இருக்கும் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்