5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

புதன், 23 மார்ச் 2022 (17:48 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
கோடை வெயில் ஒருபக்கம் கொளுத்தி வந்த போதிலும் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்று முதல் அதாவது மார்ச் 23-ஆம் தேதி முதல் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மார்ச் 24 25 26 27 ஆகிய தேதிகளில் புதுவை காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்