அடுத்த 2 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

புதன், 4 ஜனவரி 2023 (07:57 IST)
கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வந்தது என்பதும் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இந்த மழை பெய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை காரணமாக அனைத்து நீர்நிலைகளிலும் 90 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் கஷ்டம் வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்னும் இரண்டு மணி நேரத்தில் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் இருப்பினும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்