அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்: உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த சென்னை மேயர் பிரியா

புதன், 14 டிசம்பர் 2022 (15:37 IST)
உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து அவருக்கு ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் சென்னை மேயர் ப்ரியா அவர்கள், உதயநிதி ஸ்டாலினுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: "அமைதியாய் இருந்தாலும்...! அடக்கமாய்த் திகழ்ந்தாலும்...! அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!" 
 
சென்னை மேயர் மட்டுமின்றி திமுக அமைச்சர்கள் மற்றும் திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் பிற கட்சியின் தலைவர்களும் உதயநிதி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்