சென்னையில் வணிக வளாகங்கள் செயல்படும்! ஆனா கட்டுப்பாடு உண்டு!

திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (08:49 IST)
சென்னையில் கொரோனா காரணமாக வணிக வளாகங்கள், துணிக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில் மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் வணிக வளாகங்கள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல பெருங்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முதல் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட 9 பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள் வழக்கம்போல செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் நேரக்கட்டுப்பாடு, கொரோனா விதிகள் கடுமையாக பின்பற்றப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்