கொரோனா வைரஸ் தாக்கம்: சென்னை விமானங்கள் அதிரடியாக ரத்து

திங்கள், 9 மார்ச் 2020 (08:20 IST)
சென்னை விமானங்கள் அதிரடியாக ரத்து
சீனாவில் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிற்கும் பரவியதை அடுத்து தற்போது தமிழகத்திலும் நுழைந்துவிட்டது. தமிழக வெப்பநிலை 37 டிகிரியில் இருந்து 40 டிகிரி வரை இருக்கும் என்பதால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. ஏனெனில் கொரோனா அதிகபட்சமாக 28 டிகிரி வெப்பநிலையில் மட்டுமே உயிர்வாழும் என்றும் அதற்கு மேல் வெப்பநிலை இருந்தால் தானாகவே அழிந்துவிடும் என்றும் கூறப்பட்டது 
 
இருப்பினும் தமிழகத்தில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து வரும் விமான பயணிகளிடம் இருந்துதான் பெரும்பாலும் வைரஸ் பரவுவதால் தமிழகத்தில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து குவைத் செல்லும் விமானங்களான இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இன்று இரண்டாவது நாளும் சென்னை-குவைத் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
வெளிநாட்டு பயணத்தை முற்றிலும் குறைத்தாலே வைரஸ் பரவாமல் இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்