வைரஸ் தாக்கம்: மூன்று நாட்கள் பள்ளிகள் விடுமுறை என அறிவிப்பு!

திங்கள், 9 மார்ச் 2020 (08:03 IST)
கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் மட்டுமின்றி அண்டை நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வெகுவாக பரவி விட்ட நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் எட்டிப் பார்த்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் நேற்றுவரை கொரோனா வைரசால் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இருப்பினும் உயிரிழப்பு எதுவும் இதுவரை இல்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம். தமிழகத்திலும் இரண்டு பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கேரளாவில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பத்தினம்திட்டா பகுதியில் உள்ள அவர்களது உறவினர்களுக்கும் கொரோனா வைரஸ் உள்ளதா என்பது குறித்த பரிசோதனை நடந்து வருவதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் பத்தனம் திட்டா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா  வைரஸ் தாக்கம் மேலும் பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக கேரள அரசால் எடுக்கப்பட்டு
வருவதாகவும் எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருந்தாலும் திட்டமிட்டபடி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவருக்கும் மாஸ்க் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்