கடந்த 2015 முதல் 2017 ஆம் ஆண்டுகளுக்கான குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது. இதில், சென்னை தான் பெண்களுக்கு எதிராகவும், பட்டியலினத்தவர்/பழங்குடியினர் எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் மிக குறைவான எண்ணிக்கையில் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல் இந்தியாவில் சென்னையில் தான் பொருளாதார குற்றங்கள் மிகவும் குறைந்த அளவில் உள்ளதாகவும், கணிணி வழி குற்றங்களும் குறைந்த அளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் சென்னை எனவும் குறிப்பிட்டுள்ளது.