பெட்டிக்கடை நடத்தி வந்த மூதாட்டியிடம் செயின் பறித்துச் சென்ற நபரை வேப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை

J.Durai

புதன், 24 ஜூலை 2024 (18:26 IST)
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நல்லூர் கிராமத்தில் பொட்டிக்கடை நடத்தி வந்த வேலு மனைவி  லட்சுமி-65 என்பவரிடமிருந்து 4 .1/2 பவுன் செயின் பறித்துச் சென்ற வழக்கில் விருத்தாசலம் அம்மாசி மகன் கிருஷ்ணமூர்த்தி- 43 என்பவரை நேற்று வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கிருஷ்ணமூர்த்தியை வேப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மேற்கொண்ட நபர் விருத்தாசலம்  மணலூரில் தேவி என்ற பெயரில் மெடிக்கல் நடத்தி வருகிறார் கடன் பிரச்சனையால் கடன் வாங்கியவர்களிடம் சமாளிக்க முடியாமல் கடந்த 12-ம் தேதி நல்லூர் கிராமத்தில் பொட்டிக்கடை நடத்தி வரும் மூதாட்டியிடம் சிகரெட் வாங்கியது போல் நடித்து கழுத்தில் இருந்த 4.1/2 பவுன் செயினை பறித்து சென்றுள்ளார்.20-ம் தேதி அன்று விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் கிராமத்தில் பாக்கியா ஹலோ பிளாக் கம்பெனி அருகில் சென்று கொண்டிருந்தபோது  கணவன் மனைவி சைக்கிளில் தனியாக சென்று கொண்டிருந்தனர் அவர்களிடம் நடுக்காட்டு அம்மன் கோவில் வழி கேட்டு அவர்கள் திரும்பிய போது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கலியை அறுத்துச் சென்றுள்ளார்.22 -ஆம் தேதி அன்று பெண்ணாடம் அருகில் உள்ள முருகன்குடி அருகில் வெள்ளாற்று பாலத்தில் தனியாக நடந்து கொண்டிருந்த ஒரு பாட்டியிடம் பெண்ணாடம் போவதற்கு வழி எப்படி என்று கேட்டு அந்த பாட்டி வழி சொல்லிவிட்டு திரும்பிய போது அவர் கழுத்தில் இருந்து 1.1/2 பவுன் செயினை அறுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நல்லூரில் நடந்த திருட்டு சம்பவத்தை எதிரியை கண்டுபிடிக்க வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன், உதவி ஆய்வாளர் பாக்யராஜ் தலைமையிலான தனிப்படையினர் சிசிடிவி   கேமராக்களை  ஆய்வு செய்தபோது சந்தேகமான நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்வதை அறிந்து குற்றவாளி  அடையாளம் தெரிந்து குற்றவாளி கிருஷ்ணமூர்த்தியை  கைது செய்து அவரிடமிருந்து  மூன்று வழக்கு நகைகளையும்  பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்