லஞ்சத்தை ஒழிக்க சிசிடிவி கேமரா… வழக்கு தொடர்ந்த நபருக்கு அபராதம்!

புதன், 2 பிப்ரவரி 2022 (11:16 IST)
லஞ்சத்தை ஒழிக்க அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும் என மனு அளித்தவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சிலவற்றில் அவ்வபோது லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டால் தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் பல பகுதிகளில் லஞ்சம் வாங்குவது தொடர்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதை ஒழிக்க அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும் என கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர் விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், 2 ஆண்டுகள் வழக்குத் தொடர தடையும் விதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்