ஆவடி இரட்டைக் கொலை – ஓராண்டுக்குப் பின் சிக்கிய கொலையாளிகள் !

புதன், 9 அக்டோபர் 2019 (08:43 IST)
சென்னையில் தனது வீட்டில் தங்கவைத்து வேலைப் போட்டுக்கொடுத்த ஜெகதீசன் – விலாசினி தம்பதியினரைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான கொலையாளிகளைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆவடியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான ஜெகதீசனும் அவரது மனைவி விலாசினியும் ஆவடியில் உள்ள தங்கள் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். மதுக் குடிக்கும் பழக்கம் உள்ளவரான ஜெகதீசன் மது விடுதியில் சந்தித்த நபரான சுரேஷ்குமார் என்பவரை வீட்டுக்கு அழைத்துவந்து வேலைக் கொடுத்துள்ளார். அதோடு அவரது மனைவி பூவலட்சுமியையும் தன்னுடைய பண்ணை வீட்டிலேயே தங்க அனுமதிக் கொடுத்துள்ளார்.

சுரேஷ்குமார் வீட்டுக்கு வந்ததற்குப் பிறகு ஜெகதீசனின் குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது. இதனால் அவரின் மனைவி விலாசினி சுரேஷை வேலையை விட்டு நீக்க சொல்லியுள்ளார். அதற்கு ஜெகதீசனும் சம்மதித்துள்ளார். இதனால் தனது சொகுசு வாழ்க்கை பறிபோய்விடுமோ என அஞ்சிய சுரேஷ் ஜெகதீசனை நன்றாகக் குடிக்க வைத்துவிட்டு இரும்புக் கம்பியால் அவரையும் அவரது மனைவியும் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் அந்த வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தன் மனைவியோடு தலைமறைவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இந்த இரட்டைக்கொலைகள் நடந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் சுரேஷ்குமாரும் அவர்து மனைவி பூவலட்சுமியும் ஹரித்வாரில் வைத்து போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு சுரேஷ்குமார் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்