வழிப்பாட்டு தலங்களை திறந்தால் பிரச்சினை வரும்! – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

திங்கள், 18 மே 2020 (15:07 IST)
தமிழகத்தில் வழிப்பாட்டு தலங்களை திறக்க கோரி அளிக்கப்பட்ட மனுவின் மீதான விசாரணைக்கு பிறகு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த  மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் வழிபாட்டு தலங்கள், டாஸ்மாக் கடைகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தொழிற்சாலைகள், டாஸ்மாக் கடைகள் போன்றவை செயல்பட தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களையும் திறக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. மனு மீதான விசாரணைக்கு தமிழக அரசை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் “தமிழகத்தில் வழிப்பாட்டு தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படலாம்” என விளக்கம் அளித்துள்ளது.

அதை தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்