தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்க வைக்கிறார். இன்று தொடங்கும் சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் அனைத்து பதிப்பாக புத்தகங்களும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புத்தக கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ 10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் , வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,