சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. என்ன காரணம்?

Siva

செவ்வாய், 28 மே 2024 (07:59 IST)
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரும் செல்லும் மின்சார ரயில் இனி சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் முதல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே சென்னை கடற்கரை முதல் சிங்கப்பெருமாள் கோவில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மின்சார ரயிலை நம்பியே ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வரும் நிலையில் திடீரென மின்சார சேவையை பகுதியாக மாற்றி உள்ளது பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த உடன் மீண்டும் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்