தற்போது ரயில், விமானம் உள்பட எந்த போக்குவரத்தும் இல்லை என்பதால் அவரது உடலை சாலை மார்க்கமாக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்கு உரிய அனுமதி பெற்று மிசோரம் மாநிலத்திற்கு இறந்த இளைஞரின் உடலை சுமந்து கொண்டு ஆம்புலன்ஸ் சென்றது., சுமார் 3000 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த அந்த இளைஞரின் உடலை சென்னையை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மிசோரம் மாநிலத்தில் கொண்டு போய் சேர்த்தார். இதனையடுத்து அவரது செயலைப் பாராட்டி மிசோரம் மாநில மக்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்