மோடிகே டஃப் கொடுப்பாரு போல.. வீடியோ கான்பிரன்சில் உதயநிதி!!

செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (12:39 IST)
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் வீடியோ கான்பிரன்ஸில் பேசியுள்ளார். 
 
கொரோனா பேரிடரால் மத்திய - மாநில அரசு கள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுபவர் 9361863559 என்ற எண்ணுக்கு அழைத்தால் உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்து அதனை செம்மையாக நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 
இது குறித்து உதயநிதி தெரிவித்துள்ளதாவது ஊரடங்கினால் வறுமையில்வாடும் மக்களுக்கு இளைஞரணி சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நலத்திட்ட உதவிகள் குறித்து  மாவட்ட- மாநகர் அமைப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவிபொருட்களை வழங்கியுள்ள இளைஞரணி தோழர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்