பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்!!

திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (15:27 IST)
சென்னையில் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமையவுள்ளது என்று மாநிலங்களவையில் அறிவிப்பு.


சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக சென்னை மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது அது இறுதி வடிவம் பெற்றுள்ளது.

ஏற்கனவே சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து இருந்தது. இந்த நான்கு இடங்களில் பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரண்டு இடங்களில் மத்திய அரசு பரிசீலனை செய்து வந்தது.

இவற்றில் ஒன்றில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் ஆகும் என்றும் கூறப்பட்டது. குறிப்பாக சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறி இருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமையவுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இறுதி செய்யப்பட்ட இடத்திற்கு மாநில அரசு இட அனுமதியை வழங்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்