டிசம்பர் 19 முதல் மீண்டும் கனமழை.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

செவ்வாய், 13 டிசம்பர் 2022 (13:53 IST)
டிசம்பர் 19ஆம் தேதி முதல் மீண்டும் சென்னைக்கு கனமழை இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாடு வெதர்மேன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சென்னை உள்பட தமிழகம் மழை நிலவரம் குறித்த பதிவுகளை செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை நல்ல மழை பெய்து இருப்பதாகவும் மேலும் நல்ல மழை பதிவாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மாண்டஸ் புயல் உருவாகி மாமல்லபுரம் அருகே கரையை கடந்த போது சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது என்றும் அந்த மழை டிசம்பர் 19ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 இதுவரை சென்னை நகர வரலாற்றில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 1000 மில்லிமீட்டர் மழை என்ற பெய்தது இல்லை என்றும் ஆனால் இந்த ஆண்டு அதை பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதுவரை சென்னையில் 924 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்றும், இன்னும் 76 மில்லி மீட்டர் மழை பெய்தால் 1000 மில்லி மீட்டர் மழை பதிவாகிவிடும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்