தாமாக முன்வந்து விஜயகாந்திற்கு அரசு மரியாதை வழங்கினார் முதல்வர் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

வெள்ளி, 29 டிசம்பர் 2023 (13:30 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த்  நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினர் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் உடலுக்கு, சினிமாத்துறையினர், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், முதல்வரின் நண்பருமான விஜயகாந்திற்கு மரியாதை செலுத்த ஏதுவான சூழலை அமைத்துத் தந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’எந்த ஒரு கோரிக்கையும் வருவதற்கு முன்பே தாமாக முன்வந்து அரசு மரியாதை வழங்கினார்... நேற்றைய கூட்ட நெரிசலைக் கண்டு தீவுத் திடலில் இடம் அளித்து இரவு முழுவதும்  சென்னை மாநகராட்சி, தமிழக போலீஸ் துரிதமாக செயல்பட்டு ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் மறைந்த திரு விஜயகாந்த் அவர்களுக்கு மரியாதை செலுத்த ஏதுவான சூழலை அமைத்து தந்தார் நமது மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள்

ஒரு அற்புதமான மனிதனுக்கு ஒரு உண்மையான நண்பனாகவும், பொறுப்புள்ள முதலமைச்சராகவும் செயல்படுகிறார் நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

எந்த ஒரு கோரிக்கையும் வருவதற்கு முன்பே தாமாக முன்வந்து அரசு மரியாதை வழங்கினார்... நேற்றைய கூட்ட நெரிசலைக் கண்டு தீவுத் திடலில் இடம் அளித்து இரவு முழுவதும் @chennaicorp @tnpoliceoffl துரிதமாக செயல்பட்டு ரசிகர்கள் /தொண்டர்கள்/ பொதுமக்கள் ஆகியோர் மறைந்த திரு #விஜயகாந்த் அவர்களுக்கு…

— Dr. T R B Rajaa (@TRBRajaa) December 29, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்