கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் மிக எளிதாக வெற்றி பெற்று விடுவார் என்றும் தயாநிதி மாறனுக்கு அந்த தொகுதியில் உள்ள செல்வாக்கு மற்றும் கூட்டணி பலம் ஆகியவை காரணமாக அவர் தேர்தல் பிரச்சாரமே செய்யாமல் இருந்தால் கூட வெற்றி பெற்றுவார் என்று தான் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு டைம்ஸ் என்ற ஊடகம் எடுத்த கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 32 சதவீத வாக்குகளும், திமுகவுக்கு 30 சதவீத வாக்குகளும் ,அதிமுகவுக்கு 15 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது