Cell Tracker ஆப்: தொலைந்துபோன அல்லது திருட்டு போன செல்போன்கள் பற்றி புகாரளிக்கலாம் -காவல்துறை

திங்கள், 3 ஜூலை 2023 (20:56 IST)
தொலைந்துபோன அல்லது திருடுப் போன செல்போன்கள் பற்றி புகாளிக்கலாம் என்று வேலூர் மாவட்ட காவல்துறை ஒரு செல்போன் எண்ணை அறிவித்துள்ளது.

இன்றைய  நவீன காலத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், இளைஞர்கள், பெரியோர் என எல்லோருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றன.

தொழில்  நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஸ்மார்ட் விலை  உயர்ந்த செல்போன்கள்  புதிது புதிதாக சேம்சங், நோக்கியா, ரெட்மீ, ஒன் பிளஸ், கூகுள் உள்ளிட்ட   செல்போன் நிறுவனங்கள்  வெளியிட்டு வருகின்றன. 

இந்த ஸ்மார்ட் போன்கள் பல ஆயிரம் விலை கொண்டதாக உடையதால் அவற்றை வாங்கும் மக்கள் அதை தொலைந்து விட்டாலோஅல்லது திருடுப் போனாதலோ மக்கள் பெரும் இழப்பை சந்திக்கின்றனர்.

இந்த   நிலையில்,  வேலூர் மாவட்ட காவல்துறை Cell Tracker என்ற ஒரு ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தொலைந்துபோன அல்லது திருட்டு போன செல்போன்கள் பற்றி புகாரளிக்கலாம் என்றும் 94862 4166 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்