சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்குவது எப்போது? அதிரடி அறிவிப்பு

வியாழன், 11 பிப்ரவரி 2021 (19:02 IST)
தமிழகத்தில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கல்லூரிகளுக்கும் வகுப்புகள் திறக்கப்பட்டு விட்டன என்பதும் மாணவர்கள் கல்லூரிகளுக்கு நேரில் வந்து பாடங்களை படித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்து எழுந்து வந்த நிலையில் தற்போது அது குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது
 
சிபிஎஸ்இ 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 1 முதல் பள்ளிகளை தொடங்கலாம் என சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மாநில அரசின் அனுமதியோடு நடப்பு கல்வி ஆண்டில் முன்கூட்டியே பள்ளிகளை திறக்கவும் சிபிஎஸ்சி அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்