சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதத்தால் சிக்கல்: அமைச்சர் பொன்முடி

வியாழன், 14 ஜூலை 2022 (14:02 IST)
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு தாமதமாகி வருவதால் கல்லூரிகளில் மாணவர் சேர்கையில் சிக்கல் எழுந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் 
 
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தாமதமாவதாக விளக்கமளித்துள்ளார் 
 
ஏற்கனவே தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளிவருவதை பொருத்தே கடைசி தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்