முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ சோதனை

சனி, 9 செப்டம்பர் 2017 (18:56 IST)
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.


 

 
சென்னையில் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக இருந்த போது ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பும் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான 512.43 ஹெக்டேர் நிலம், ஜிந்தால் ஸ்டீல் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டின்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது.
 
இதனால் அந்த நிறுவனம் மீது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜனிடமும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்