கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்… கருணாஸ் பகிர்ந்த தகவல்!

vinoth

புதன், 22 மே 2024 (18:03 IST)
இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜீவா, அஞ்சலி மற்றும் கருணாஸ் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் கற்றது தமிழ். இந்த படம் ரிலீஸான போது தோல்விப் படமாக அமைந்தது. ஆனால் ரிலீஸுக்குப் பிறகு கவனிக்கப்பட்டு ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது. குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் இன்று வரை கொண்டாடப்படுபவைகளாக அமைந்துள்ளன.

இந்த படம் பற்றி நடிகர் கருனாஸ் இப்போது ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அவர் அளித்த சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் “கற்றது தமிழ் படத்தை வேறு ஒருவர் தயாரித்திருந்தாலும், அதற்கு ரிலீஸில் சிக்கல் வந்த போது நான் அந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்தேன். அதனால் எனக்கு அப்போதே 2.25 கோடி ரூபாய் நஷ்டம் ஆனது. அப்போது என்னைப் போன்ற ஒரு சிறிய நடிகனுக்கு அது பெரிய தொகை.

இது யாருக்கும் தெரியாது. ஆனால் நான் அப்போது ரிஸ்க் எடுத்ததால்தான் இன்றைக்கு இயக்குனர் ராம் அனைவருக்கும் தெரிந்த இயக்குனராக இருக்கிறார். நடிகை அஞ்சலி முன்னணி நடிகையாக இருக்கிறார்” என பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்