காவிரி நதி நீர்: கர்நாடகாவிற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த காவிரி மேலாண்மை ஆணையம்..!
வெள்ளி, 3 நவம்பர் 2023 (18:25 IST)
தமிழ்நாட்டிற்கு 2600 கன அடி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு உடனடியாக 2600 கன அடி நீரை நவம்பர் 23ஆம் தேதி வரை திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக மாநிலத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவின் அடிப்படையில் கர்நாடகா நீரை திறந்து விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தியும் காவிரியில் நீர் திறக்காததை அடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு பின்னராவது திறந்து விடுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.