சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றும், ஏதோ எதிரி நாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கர்நாடகாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
காவிரியில் 13 ஆயிரம் கன அடி நீர் திறக்க நாங்கள் கோரிக்கை வைத்தோம், உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது, ஏதோ எதிரி நாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.