இதையடுத்து, நேற்று முன்தினம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்.
இந்த நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் டிடிஎஃப் வாசன். அவரது டிரைவிங் லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.